4 காரில் பணத்துடன் தப்பிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி: ரஷ்ய தூதரகம் தகவல்

மாஸ்கோ: ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, நான்கு கார்களில் நிரப்பப்பட்ட பணத்துடன் ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை அடுத்து, தலிபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றினர். தலைநகர் காபூலையும் கைப்பற்றி உள்ளனர். இதனால், அந்நாட்டு அதிபர்  பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கனி, தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ரஷ்ய தூதரக செய்தித் தொடர்பாளர் நிகிதா கூறியதாவது; ஆப்கானிஸ்தானிலிருந்து நான்கு காரில் நிரப்பட்ட பணத்துடன் ஹெலிகாப்டரில் ஏறி ஆப்கானிலிருந்து அதன் அதிபர் அஷ்ரப் கனி வெளியேறிவிட்டார். அவர்கள் பணத்தை காரில் ஏற்றும்போது இடமில்லாத காரணங்கள் பல ரூபாய் நோட்டுகள் தரையில் விழுந்தன. தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது எனவும் கூறினார். …

Related posts

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது