டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு; அனைத்து பயிற்சி மையங்களையும் மூட மேயர் உத்தரவு!

டெல்லி: டெல்லியில் அனைத்து பயிற்சி மையங்களையும் மூட மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவு அளித்துள்ளார். டெல்லியில் நேற்று ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய அடித்தளத்தில் மழை நீர் தேங்கி 3 பேர் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் உயிரிழந்த சம்பத்தில் வலுவான, சாத்தியமான விசாரணையும் நடவடிக்கையும் தேவை. டெல்லியில் எங்கும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு என்று மேயர் உறுதி அளித்துள்ளார்.

டெல்லியில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பழைய ராஜேந்திர நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் தண்ணீரில் மூழ்கியது. பயிற்சி மையத்தில் புகுந்த மழை வெள்ள நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர். பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீரில் சிக்கிய 2 மாணவியர் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் இருந்தபோது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் வெளிவர முடியாமல் மூழ்கியுள்ளனர். தண்ணீரை வெளியேற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 3 மாணவரிகளின் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டுமென மாணவர்கள் ஆவேசமாக கூறிவருகின்றனர். மேலும் அரசு சார்பில் சம்பவ இடத்திற்கு வந்து யாரும் பார்வையிடவில்லை என பயிற்சி மையத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு