3 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம்; போராட்டத்துக்கு ஆசிரியர்களை அழைக்கும் மாணவர்கள்: டெல்லியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

புதுடெல்லி: டெல்லி சம்பவம் தொடர்பாக தங்களது ஆசிரியர்களை மாணவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். டெல்லியில் பழைய ராஜேந்திரா நகரில் அமைந்துள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால், சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி முகர்ஜி நகரில் நேற்று நள்ளிரவு வரை மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், தங்களது ஆசிரியர்களையும் தங்களுடன் போராட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பான ஹேஷ்டாக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பலர், தங்களது ஆசிரியர்களின் பெயர்களை எழுதி போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். தற்போது ராஜேந்திர நகர் பகுதியில் விதிமீறி கட்டப்பட்டிருக்கும் கட்டுமான பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் இடித்து வருகிறது. மூன்று பேர் பலியான சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விதிமுறை மீறி செயல்பட்டு வந்த 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்திலும் மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விவாதங்கள் நடந்தது. இந்நிலையில் தங்களுக்கு நீதி வேண்டும் எனக்கோரி, டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு