கோவை மதுக்கரை அருகே லாரியும் ஜீப்பும் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!

கோவை: கோவை மதுக்கரை அருகே லாரியும் ஜீப்பும் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளார். கோவை மதுக்கரை அருகே குமிட்டிபதியை சேர்ந்தவர் கணேசன் (35). தனியார் பேருந்து ஓட்டுனரான இவர் நேற்று இரவு தனது ஜீப்பில் வேலந்தாவளத்திற்கு சென்றுவிட்டு குமிட்டிபதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது உறவினர்கள் குமிட்டிபதியை சேர்ந்த ஜெயக்குமார் (32), சிவக்குமார் (35), கோபால் என்பவரின் 12 வயது மகன் ஹரி ஆகியோர் உடனிருந்தனர். மாஸ்தி கவுண்டன்பதி அருகே வாத்தியார் தோட்டம் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப், ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதியில் இருந்து கேரளாவிற்கு சிமெண்ட் குடிநீர் குழாய் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது மோதியது.

இதில், ஜீப் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. ஜீப்பை ஓட்டி வந்த கணேசன், ஜீப்பில் வந்த ஜெயக்குமார், சிவக்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த சிறுவன் ஹரி சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து க.க.சாவடி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!