3 புதிய குற்றச்சட்டங்கள் அறிமுகம் மூன்று மாதத்தில் அறிக்கை தர உத்தரவு: நிலைக்குழுவுக்கு ஜெகதீப் தன்கர் அதிரடி

புதுடெல்லி: இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா ஆகிய 3 புதிய மசோதாக்கள் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 3 மசோதாக்களும் நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, 3 புதிய சட்டங்களையும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார். உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு, மாநிலங்களவையை சேர்ந்தது. பாஜ எம்பி பிரிஜ்லால் நிலைக்குழு தலைவராக உள்ளார். இந்த குழு 3 மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை தர மாநிலங்களவை தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது