3 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதியில் நேற்று பக்தர்கள் வருகை அதிகரித்து பக்தர்கள் சுமார் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 77 ஆயிரத்து 807 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 38 ஆயிரத்து 340 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4.02 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள ஏடிஜி காட்டேஜ் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

 

Related posts

ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!

காட்டுக் கோழி (Junglefowl)