ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் வரும் 6ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: திமுக சட்டத்துறை அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் வரும் 6ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என திமுக சட்டத்துறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. திமுக சட்டத்துறை செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ தலைமை தாங்கினார். சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலை வகித்தார்.

ஜூலை 1ம் தேதி முதல் அமல் செய்யப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும், இந்திய திருநாட்டினை காவல்துறை ஆதிக்க ஆட்சி நாடாக மாற்றும் வகையிலும் இருப்பதால் இச்சட்டங்களை ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், இதனை எதிர்த்து வரும் 6ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களின் பாதகங்களை வழக்கறிஞர்கள் மட்டும் இன்றி, பொது மக்களும் அறிந்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கண்டன கருத்தரங்கங்கள் நடத்துவது என்றும், இந்த கருத்தரங்கில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைத்து வழக்கறிஞர்களும் பங்கு எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்