3 வழக்குகளில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

ஆந்திரா: 3 வழக்குகளில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்க ஆந்திர உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அமராவதியில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட், அங்கல்லூ கலவர வழக்குகளில் சந்திரபாபு நாயுடுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திறன்மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு உள்ளார். அதேபோல திறன் மேம்பாட்டு வழக்கில் சந்திரபாபு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த இரண்டையும் தவிரத் திறன் மேம்பாட்டு வழக்கில் ஜாமீன் மற்றும் போலீஸ் காவல் தொடர்பான மனுக்களிலும் விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளது.

Related posts

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு நாளிதழ்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரமாக வெளியிடவேண்டும்: திரைப்பட இயக்குநர் மோகன்ஜிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும்; நாளை முதல் 9ம் தேதி வரை தேசிய விழிப்புணர்வு நடைபயணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு