நிதி நிறுவன மோசடியில் 3 பேர் கைது

சென்னை: பெரம்பூரில் தி பரஸ்பர சகாய நிதி லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் 10.8 சதவீதம் வட்டியுடன், முன்பணம் சேர்த்து திருப்பி தருவதாக கூறி 430 பேரிடம் இருந்து ரூ.27,36,52,364 கோடி ஏமாற்றியதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வசந்தி, ராஜம், சக்தி ஐஸ்வர்யா ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு செல்போன், கம்ப்யூட்டர் மற்றும் 120 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ன. இதுபோன்று மோசடி பற்றி தெரியவந்தால் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை தொடர்பு எண் 044-22504332 என்ற எண்ணிற்கும் மற்றும் இ-மெயில் ஐடி dspcciwcidcni@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்