அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை


திருமலை: ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் ஏலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் 14 பேர் நேற்று முன்தினம் ஜலதரங்கிணி அருவிக்கு சென்று ந குளித்துகொண்டிருந்தனர். அப்போது அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 5 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைபார்த்த சக நண்பர்கள் அலறி கூச்சலிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்ட 2 பேரை மீட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஹரதீப்(20), சவுமியா(21), அமிர்தா(21) ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது

அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு கர்நாடக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: ஜனாதிபதியிடம் வலியுறுத்த சித்தராமையா அரசு முடிவு