3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றியஅரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; இந்தியில் சட்டங்களுக்கு பெயர் சூட்டியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய அரசு; 3 சட்டங்களும் அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறவில்லை; எவரின் அடிப்படை உரிமையும் பாதிக்கப்படவில்லை. “மூன்று குற்றவியல் சட்டங்களும் ஆங்கில எழுத்துக்களில் தான் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் நாடாளுமன்றத்தின் விருப்பம்; இதில் நீதிமன்றம் தலையிட முடியாது,”இவ்வாறு வாதிடப்பட்டது. இதையடுத்து, 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் ஜூலை 23க்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது