சென்னை: மாணவர்கள், பொதுமக்களுக்கு 382வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்த உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 20ம் தேதி 21ம் தேதியில் சிங்காரச் சென்னை குறித்த ஓவியப் போட்டி (14 வயது.), சிங்காரச் சென்னை குறித்த புகைப்படப் போட்டிகள் நடைபெறும். 22ம் தேதி மாநகராட்சி கட்டடச் சுவர்கள், பாலங்களின் கீழுள்ள இடங்கள் மற்றும் இதரப் பொது இடங்களை மறுவடிமைக்கும் திட்ட வரைபடப் போட்டி நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் தங்களுடைய படைப்புகளை chennaicorporation.gov.in என்ற இணையத்தில் போட்டிகளுக்கான நாட்களில் பதிவேற்றம் செய்யலாம். …