38 ஆயிரம் அரசு பள்ளிகளை மேம்படுத்த ரூ.7500 கோடி நிதி ஒதுக்கப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

சென்னை: 38 ஆயிரம் அரசு பள்ளிகளை மேம்படுத்த ரூ.7500 கோடி நிதி ஒதுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். சென்னை கொரட்டூரில் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகர மேயர் பிரியா, திமுக தீர்மானக்குழு செயலாளர் கம்பம்செல்வேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘43 ஆண்டு காலம் பொது செயலாளர் என்ற அசைக்க முடியாத பொறுப்பு, 80 ஆண்டு காலம் திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பேராசிரியர் அன்பழகன் வாழ்ந்த மாவட்டம் இது. அவரது புகழை போற்றும் வகையில், பள்ளி கல்வித்துறை அலுவலகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் வளாகம் என முதல்வர் பெயர் சூட்டியது நமக்கெல்லாம் பெருமை. 38 ஆயிரம் அரசு பள்ளிகளை மேம்படுத்த, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7500 கோடி ஒதுக்கப்படும். இந்தாண்டுக்கு ரூ.1400 கோடியை முதல்வர் ஒதுக்கி உள்ளார் ’’ என்றார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை