3,5,8ம் வகுப்புகளுக்கு வினாடி வினா தொகுப்பு: வாட்ஸ்அப்பில் அனுப்ப உத்தரவு

சென்னை:  பள்ளி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  இணைப்பு பாடப் பொருள் தயாரித்தல், புத்தாக்க கையேடுகள் தயாரித்தல் போன்ற பணிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக 3, 5, மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்காக கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பையும் மேற்கண்ட நிறுவனம் தயாரித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இந்த வினாடி வினா தொகுப்பை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து  அந்தந்த பாட ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி  பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் வினாடி வினா  குறித்து கலந்துரையாடல் நடத்தி அதன் மூலம் கற்றல் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்