3,400 மாணவர்கள் பதாகைகள் ஏந்தியபடி 5 நிமிடம் ஒரே இடத்தில் நின்று சாதனை

 

விருதுநகர், செப்.23: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் அவார்ட் சிட்டி டோஸ்ட் மாஸ்டர் அமைப்பு மற்றும் அமெரிக்க உலக சாதனை சங்கம் இணைந்து இயற்கை மற்றும் மனித வாழ்க்கை குறித்து விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி கல்லூரி செயலாளர் சர்ப்பராஜன் தலைமையில் கல்லூரி முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 3,400 மாணவ, மாணவியர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தொடர்ந்து 5 நிமிடங்கள் பங்கேற்று இயற்கை, வனவிலங்குகள் மற்றும் மனித பாதுகாப்பு வலியுறுத்திய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாணவர் நலன் டீன் நிர்மல்குமார் வரவேற்றார். உலக சாதனை சங்க புளோரிடா அமெரிக்க மேலாளர் மற்றும் பதிவாளர் கிரிஸ்டோபர் டெய்லர் கலந்து கொண்டு உலக சாதனை சான்றிதழை வழங்கினர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு