பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும்: தனபாலன் கோரிக்கை

சென்னை: பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மசோதாவை நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றியிருப்பதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன். காலம் தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக அமலுக்கு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இன்று காலம் தாழ்த்தி பெண்களுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அவற்றை உடனடியாக அமல்படுத்துவது தான் சரியாக இருக்கும். பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அதிகாரத்தை கொடுக்கும் பட்சத்தில் தவறுகள் தடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Related posts

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!