32 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் பேரறிவாளன்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி..அற்புதம்மாள்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் பேரறிவாளன் வெளியே வந்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தங்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவை அடங்கிய அமர்வு, அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. பேரறிவாளனின் 32 ஆண்டுகால சிறைவாசத்தில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்குவது இதுவே முதல் முறை ஆகும்.பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. பேரறிவாளன் முழுமையாக விடுதலை பெற சட்டப்போராட்டம் தொடரும். பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும். பேரறிவாளனுக்கு கிடைத்துள்ள ஜாமின் இடைக்கால நிவாரணமே என்றும் அற்புதம்மாள் கூறியுள்ளார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்