வருகிற 30ம் தேதி காலநிலை மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் வருகிற 30ம் தேதி தொடங்கும் காலநிலை உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐக்கிய நாடுகளின் உலக காலநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற உள்ளது. வருகிற 30ம் தேதி தொடங்கும் இந்த மாநாடு டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர், வருகின்ற 30ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைகிறார். இந்த மாநாட்டில் டிசம்பர் ஒன்றாம் தேதி இந்தியாவின் காலநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தேசிய அறிக்கையை பிரதமர் மோடி வெளியிடுகிறார். மேலும் அன்றைய தினமே அவர் இந்தியா திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 1-2 தேதிகளில் நடைபெறும் உலக காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் அரசின் தலைவர்கள்,வர்த்தகம், இளைஞர்கள், பழங்குடியின மக்கள் அமைப்புக்கள், அறிவியல் மற்றும் பிற துறைகளின் தலைவர்கள் காலநிலை நடவடிக்கையை அளவிடுவது குறித்த நோக்கங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிப்பார்கள்.

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்