உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 30 பேர் பத்திரமாக மீட்பு!

உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். நிலச்சரிவால் சிக்கித் தவித்த 30 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். நிலச்சரிவால் சிக்கித் தவித்த 30 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டது மீட்புக் குழு. சிதம்பரத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் ஆதிகைலாஷ் என்ற பகுதியில் இருந்து வரும்போது நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதி வழியாக வேனில் திரும்பியபோது, தவாகாட் தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

 

Related posts

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு மீண்டும் போலீஸ் காவல்!

குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்

மதுரை வண்டியூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ: ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்