300 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

 

கோவை, அக்.25: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி ஆனைக்கட்டி தோலம்பாளையம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் அங்கு வந்த ஒரு சரக்கு ஆட்டோவில் சோதனை நடத்தினர். அதில் இருந்த மூட்டைகள் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அதில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. அந்த ஆட்டோவை ஓட்டி வந்த கேரள மாநிலம் கோட்டப்பாடத்தை சேர்ந்த சிகாபுதீன் என்பவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து போலீசார் கடத்தி வந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்து சிகாபுதீனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி