30 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: ஒருவர் கைது

திருத்தணி: ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 லட்டர் கள்ளச்சாராயம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு காரணமானவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருத்தணி அடுத்த நெமிலியில் வசிக்கும் சிலர் ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் நெமிலி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்து  கொண்டிருந்த நெமிலி காலனியை சேர்ந்த வெங்கடேசன் (50 ) என்பவரது வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். இதில், பிளாஸ்டிக் பையில் 30 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, வெங்கடேசனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது

ரூ.20 ஆயிரம் லஞ்சம் துணை தாசில்தார், விஏஓ அதிரடி கைது