30 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசி வந்தது

ஐதராபாத்: ரஷ்யாவில் இருந்து 30 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி ஐதராபாத் வந்தது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கை அதிகரிப்பதால், தடுப்பூசிகள் தேவைகளும் அதிகரித்துள்ளது. இதனால், ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ரஷ்யாவில் இருந்து ஸ்பூட்னிக் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்த ஆர்டிஐஎப் நிறுவனம் இந்த தடுப்பூசியை உற்பத்தியை செய்ய திட்டமிட்டு அனுமதி கோரியிருந்தது. அதன்படி, அவசர கால பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. அதன்படி, இந்தியாவிலும் ஸ்புட்னிக் தடுப்பூசி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 12.5 கோடி மக்களுக்கு ஸ்புட்னிக்கை செலுத்த ரஷ்யாவுடன் ரெட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக, மொத்தம் 25 கோடி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து 30 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் விமானம் மூலம் நேற்று ஐதராபாத் வந்து சேர்ந்தது. இதுதான், இதுவரை இறக்குமதி செய்யப்பட்டதிலேயெ அதிகளவிலான தடுப்பூசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது