3 அடி உயர பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்: திருவண்ணாமலையில் சாதனை படைத்த அரசு மருத்துவர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து, மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். செங்கம் தொகுதியில் உள்ள கலஸ்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஓட்டுநர் சக்திவேல் (23). இவரது மனைவி ராஜேஸ்வரி (22)3அடி உயரமே உள்ளவர்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரியை பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடும்பத்தினர் கடந்த 17ம் தேதி சேர்த்தனர்.

அங்கு ராஜேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க மருத்துவக்குழு முடிவு செய்தது. அதன் படி மருத்துவர்களின் கடின முயற்சியால் அறுவை சிகிச்சை மூலம் ராஜேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. சவாலான இந்த அறுவை சிகிச்சைக்கு பின் தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 15 நாட்களுக்கு மேலாக ராஜேஸ்வரியை தீவிரமாக கண்காணித்து அவருக்கு சிரமம் ஏற்படாத வகையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 3 அடி உயரமுள்ள பெண்ணிற்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்து சாதனை படைத்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவகுழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு