திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.93 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 79,327 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,894 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.93 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி பக்தர்கள் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்படாமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு பிறகு பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் வைகுண்டம் அறையில் தங்க வைக்கப்பட்டு சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது