திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.83 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமான நாட்களை விட வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் அதிகளவு பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று 78,912 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,039 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது.

ரூ.3.83 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 23 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

 

Related posts

மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்