3-வது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு; 24 மணி நேரத்தில் 94,052 பேர் பாதிப்பு; 6,148 பேர் உயிரிழப்பு; 1,51,367 டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
* புதிதாக  94,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 2,91,83,121 ஆக உயர்ந்தது.
* புதிதாக  6,148 பேர் உயிரிழந்துள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,59,676 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,51,367 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,76,55,493  ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,67,952 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நாட்டின் இதுவரை 24,27,26,693 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்