3 பேருக்கு பசுமை முதன்மையாளர் விருது

சேலம், ஜூன் 27: சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்திய 3 பேருக்கு பசுமை முதன்மையாளர் விருதை, மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.நேற்று, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 513 மனுக்கள் வரப்பெற்றன. அத்துடன், மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 35 மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக, சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு, பசுமை முதன்மையாளர் ₹ஒரு லட்சம் மற்றும் சான்றிதழ்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த சேலம் இளைஞர் குழு சமூக நல அறக்கட்டளை, ஆத்தூரைச் சேர்ந்த மாவட்ட வன அலுவலர் (ஓய்வு) மணி மற்றும் ஓமலூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய மூவருக்கும், பசுமை முதன்மையாளர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையினை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, டிஆர்ஓ மேனகா, மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி