3 பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி கல்லூரி மாணவிகள் 4 பேர் காயம்

சூலூர் : கோவையில் இருந்து 2 தனியார் கல்லூரி பஸ்கள் சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி நோக்கி நேற்று சென்றது.நீலாம்பூர் பைபாஸ் சாலையை அடுத்து முதலிபாளையம் பிரிவு அருகே போக்குவரத்து நெரிசல் காரணமாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதாமல் இருக்க ஒரு கல்லூரி பஸ்சின் டிரைவர் பஸ்சை திடீரென நிறுத்தி உள்ளார். அப்போது, பின் தொடர்ந்து வந்த அதே கல்லூரியின் மற்றொரு பஸ், மோதியது. அந்த பஸ்சை பின் தொடர்ந்து கோவையில் இருந்து ஈரோடு செல்லும் அரசு பஸ் பின்னால் வேகமாக மோதியது. 2வதாக வந்த கல்லூரி பஸ், இரு பஸ்களுக்கு இடையே சிக்கி விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த 4 மாணவிகள், அரசு பஸ் டிரைவர் லேசான காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்சில் பயணம் செய்த பலர் காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சூலூர் போலீசார் போக்குவரத்து சரி செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 818 கன அடியாக சரிவு..!!

ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது!!