3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

 

நாமக்கல், ஏப்.26: நாமக்கல் பகுதியில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 30 முதல் 80 சதவீதம் வரை இருக்கும். இன்று (26ம் தேதி) 12 மில்லி மீட்டர், 27ம் தேதி 3 மில்லி மீட்டா, 28ம் தேதி 2 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இரவு நேர குறைந்த பட்ச வெப்பநிலை 22 முதல் 23டிகிரி வரை இருக்கும்.

நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது. இருப்பினும், பகல் நேரங்களில் வெப்ப சலனம் அதிகமாகியுள்ளதால், பூச்சி இனப்பெருக்கம் அதிகமாகும். அதனால் கோழிப்பண்ணைகளில் ஈக்கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும்.ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடை மற்றும் கோழிப்பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்பாட் கார்டை பயன்படுத்த வேண்டும். தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக தென்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 5 மில்லியுடன் ஒட்டும் திரவம் கலந்து பவர் கண் இயந்திரத்தின் மூலம் தெளிக்க வேண்டும். ரசாயன மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும். தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக, தர்பூசணி சாகுபடி செய்துள்ள பகுதியில் இலைப்பேண் தாக்குதலால் சேதம் தென்படுகிறது. இதை கட்டுப்படுத்த ஊதா வர்ண ஒட்டும் பொறி ஒரு ஏக்கருக்கு 5 வீதமும், இலை வழி தெளிப்பானாக வேப்ப எண்ணெய் ஒரு லிட்டருக்கு 3 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை