3 தீவுகளில் மின் திட்டங்களை அமைப்பது உட்பட இந்தியா-இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 2 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தியா தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறது. இதற்கிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரை ஜெய்சங்கர் தனித்தனியாக சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் உடனான சந்திப்பில், இந்தியா, இலங்கை இடையேயான 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவில் ஆதார் அட்டை போல், இலங்கையில் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மானியத்தை வழங்குவதாகவும், யாழ்ப்பாணத்திற்கு அப்பால் 3 தீவுகளில் நவீன மின் திட்டங்களை செயல்படுத்தவும், மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்தவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆபரேஷன்கள் ரத்து இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகவல் கவலை அளிப்பதாக தெரிவித்த ெவளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு மருந்துகள் அளிப்பது உள்ளிட்ட எந்தெந்த வழிகளில் உதவ முடியும் என்பதை இலங்கை அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும்படி இலங்கைக்கான இந்திய தூதருக்கு உத்தரவிட்டுள்ளார்….

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

இன்று ஓட்டுப்பதிவு இலங்கை புதிய அதிபர் யார்? 39 வேட்பாளர்கள் போட்டி