3 சட்டங்களை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள் ஜூலை 5ல் உண்ணாவிரத போராட்டம்

ராமநாதபுரம், ஜூலை 2: புதிய முப்பெரும் சட்டங்களை திரும்ப பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 5ம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, இந்திய தண்டனை சட்டம்(ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம்(சிஆர்சி) மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷய அதிநியாம் ஆகிய 3புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்த 3 புதிய சட்டங்களை திரும்ப வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றங்கள், கமுதி,கடலாடி,முதுகுளத்தூர்,பரமக்குடி, ராமேஸ்வரம்,திருவாடானை உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களில் நேற்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பு தொடங்கியுள்ளோம். நாளை ஆர்ப்பாட்டம், 5ம் தேதி கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் உண்ணாவிரதம் என வருகின்ற 8ம் தேதி வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

Related posts

ஒராட்டுக்குப்பையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை பேரூராட்சி தலைவர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

செட்டிபாளையம் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைள் திறப்பு

ஜாலியாக உலா வந்த காட்டுயானை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் மறியலில் ஈடுபட முயன்ற டிட்டோ ஜாக் அமைப்பினர் 51 பேர் கைது