3 கோடி மதிப்புள்ள பங்களாவை அபகரிக்க முயன்ற 4 பேர் கைது

அண்ணாநகர்: வில்லிவாக்கம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி மங்களேஸ்வரி. இவர்களது  மூத்த மகள் சித்ராதேவி லண்டனில் வசிக்கிறார். பசுபதி கடந்த 1982ம் ஆண்டு, வில்லிவாக்கம் பகுதியில் 3 கோடி மதிப்பில் பங்களா ஒன்றை  வாங்கியுள்ளார். 2011ம் ஆண்டில் அதை மகள் சித்ராதேவி மற்றும் பேர குழந்தைகளுக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்தார். இதனிடையே மங்களேஸ்வரி உயிரிழந்த நிலையில் பசுபதி மட்டும்  அந்த பங்களாவில் தங்கியிருந்தார். அவரது   உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை கவனிப்பதற்காக கொளத்தூரை சேர்ந்த அம்பிகா (58) என்பவரை  மாத ஊதிய அடிப்படையில் நியமித்தார். அம்பிகா மூலம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த நர்ஸ் சினேகலதா (68), கொளத்தூர் பகுதியை சேர்ந்த சுமதி (40) ஆகியோர் இந்த பங்களாவிற்கு வந்து தங்கினர். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட  பசுபதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உயிரிழந்தார்.பின்னர் அம்பிகா, நர்ஸ் சினேகலதா மற்றும் சுமதி  ஆகியோரை பங்களாவை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்தனர். மேலும், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அபுன் (எ) தயாளமூர்த்தி (38) என்பவருடன் சேர்ந்து, 1 கோடி  கொடுத்தால் பங்களாவை காலி செய்வதாக கூறியுள்ளனர்.இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் சித்ராதேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பங்களாவை அபகரிக்க முயன்ற  தயாளமூர்த்தி, அம்பிகா, சுமதி,  சினேகலதா ஆகியோரை கைது செய்ய வில்லிவாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், போலீசார், அவர்களை கைது செய்தனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை