3 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

கடத்தூர், பிப்.20: கடத்தூர் பேரூராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, நேற்று முன்தினம், தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர் உத்தரவின் பேரில், கடத்தூர் பேரூராட்சி மற்றும் கடைவீதிகளில் உள்ள மளிகை கடை, பேக்கரி, வணிக வளாகம், பெட்டிக்கடை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 8 கடைகளில் தடை செய்யப்பட்ட 3 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் 6 சுருள் பிளாஸ்டிக் கப்கள், டம்ளர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ₹3 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆய்வின் போது, கடத்தூர் பேரூராட்சி வரி தண்டல் அலுவலர் விஜயன், இளநிலை உதவியாளர் பெருமாள், செந்தில்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு