3 இடங்களில் மரம் விழுந்தது

ஏற்காடு, அக்.7: ஏற்காட்டில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதி அடைந்தனர். மேலும் ஓட்டல்கள், சாலையோர கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது. இரவில் தொடங்கிய மழை, அதிகாலை வரை நீடித்தது. இதில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 49.2 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. தொடர் மழையின் காரணமாக நேற்று ஏற்காடு மலைப்பாதை 17வது கொண்டு ஊசி வளைவின் அருகே வேரோடு மரம் முறிந்து விழுந்தது. மேலும் காவிரிபிக் சாலையின் குறுக்கேயும், குப்பனூர் மலைப்பாதை சாலையில் செங்காடு கிராமம் அருகேயும் மரம் வேரோடு சாய்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்