3 புதிய சட்ட திருத்தங்களை வாபஸ்பெறக்கோரி பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூலை 7: பெரம்பலூரில் 3 முப்பெரும் சட்டங்களில் சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு வாபஸ்பெற வலியுறுத்தி பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு 3 முப்பெரும் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட திருத்தங்களை வாபஸ்பெற வலியு றுத்தியும், ஏற்கனவே நடை முறையில் இருந்தபடி, முப்பெரும் குற்றவியல் சட்டங்களை மீண்டும் நடைமுறைப் படுத்த வலியுறுத்தியும், பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு காந்தி சிலை முன்பு பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் வழக்கறிஞர் கள் சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை வகித்தார். செயலாளர் சேகர், பொருளாளர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் வாசுதேவன், காமராஜ், ராதா கிருஷ்ணமூர்த்தி, பேரா.முருகையன், கதிர் கனகராஜ், ஜீவானந்தம் சங்கர், அன்புச்செல்வி, பிரியா, தனலட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் லந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை