3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை பேரிடரை கையாள தயாராக இருக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தல்

சென்னை: 3 நாட்களுக்கு கனமழை எதிரொலியாக பேரிடரை கையாள தயாராக இருக்க வேண்டும் என கலெக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் பிரபாகர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், நாளை முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. அதன்படி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் வலுபெறுகிறது. இதனால் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என அறிவித்துள்ளது. எனவே, சென்னை மாநகராட்சி மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் பேரிடரை கையாள தேவையான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்