3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி‌ முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி மாணவர்கள் சாலைமறியல்

கே.வி.குப்பம் :  கே.வி.குப்பம் அடுத்த  தேவரிஷிகுப்பம் கிராமத்தில் பல ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்நிலையில்  கடந்த 2016ம் ஆண்டு அந்தப் பள்ளி தரம்‌ உயர்த்தப்பட்டு  உயர்நிலைப் பள்ளியாக மாற்ற கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை அடுத்து கடந்த 2018ம்‌ ஆண்டு அதே பகுதியில் புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் இடம் தேர்வு செய்து அதற்கான பணிகள்  துவங்கினர். சுமார் ₹1.70 கோடி மதிப்பீட்டில்  நபார்டு திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. சுமார்  3 ஆண்டுகளாகியும்‌  இதுவரை  திறக்கப்படாமல் உள்ளது.   சுமார்  250க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதே பகுதியில் உள்ள நடுநிலை பள்ளி கட்டிடத்திலேயே   பயின்று வருவதால்  இடப்பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் இல்லாமலும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம்  கூறியும் இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.‌ இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாணவர்களோடு  நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.    இதுகுறித்து தகவலறிந்த பள்ளி தலைமையாசிரியர், கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, விஏஓ அகிலா, மாவட்ட கவுன்சிலர் அசோக் குமார், ஒன்றிய கவுன்சிலர் ரவி, கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு