3வது நாளாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

சேலம், ஆக.9: சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பண்டிகை நடந்து வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், கடந்த 6ம் தேதி தொடங்கியது. மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து, கோயில் வளாகத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நேற்று முன்தினம் 2வது நாளாகவும், நேற்று 3வது நாளாகவும் அம்மனுக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். கோட்டை மாரியம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்தனர். தொடர்ந்து நடந்த சிறப்பு வழிப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டனர். சில பக்தர்கள் உருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல், கோட்டை அண்ணாநகரில் உள்ள காந்தாரி மாரியம்மன் கோயிலில் நேற்று மாலை பக்தர்கள் அலகு குத்தி வந்து, வேண்டுதலை நிறைவேற்றினர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி