3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி

லக்னோ: இந்திய மகளிர் அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா டி/எல் விதிப்படி 6 ரன் வித்தியாசத்தில் வென்றது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசிய நிலையில், இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் குவித்தது. மந்தனா 25, பூனம் ராவுத் 77, மித்தாலி 36, ஹர்மான்பிரீத் 36, தீப்தி 36* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 46.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. இதைத் தொடர்ந்து, டி/எல் விதிப்படி 6 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். அந்த அணியின் தொடக்க வீராங்கனை லிஸெல் லீ 132 ரன் (131 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), ஆனி போஷ் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லிஸெல் லீ சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.தென் ஆப்ரிக்கா 2-1 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி லக்னோவில் நாளை நடக்கிறது….

Related posts

யுஎஸ் ஓபன் டென்னிஸ்; சின்னர் சாம்பியன்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியாவுக்கு 2வது வெற்றி: ஜப்பானுக்கு எதிராக கோல் மழை

இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில் இலங்கை ஆறுதல் வெற்றி; பதும் நிசங்கா அபார சதம்