3ம் பாலினத்தவருக்கு வேலை புதிய வழிகாட்டு நெறிமுறை: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலை வழங்குவது தொடர்பான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கும்படி ஒன்றிய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில்  விமான பணிப்பெண் பணிக்கு தமிழகத்தை சேர்ந்த ஷானவி என்ற திருநங்கை விண்ணப்பித்தார். விண்ணப்ப படிவத்தில் 3ம் பாலித்தினருக்கான பகுதி இல்லாததால், பெண்கள் பிரிவில் விண்ணப்பத்தார். அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால், உச்ச நீதிமன்றத்தில் க்டந்த 2018ம் ஆண்டு அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பதிலளித்த ஏர் இந்தியா நிர்வாகம், ‘பெண் என்ற முறையில்தான் ஷான்வி தேர்வு எழுதினார். ஆனால், தேர்வுகளில் அவர் தேர்ச்சி பெறாததால்தான் அவரை பணிக்கு எடுக்கவில்லை,’ என கூறியது. இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஏர் இந்தியா நிறுவனம் இப்போது அரசிடம் இல்லை. அப்படி இருக்கும்போது, இதில் இப்போது ஒன்றிய அரசின் பங்கு என்னவாக இருக்கிறது?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவின் நிலைபாடு என்ன? என்றும் கேட்டனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘திருநங்களுக்கு பாகுபாடு இல்லாமல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மிக முக்கியம். எனவே, 3ம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடின்றி வேலை வாய்ப்பை வழங்குவது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். 3 மாதங்களில் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி, இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவர்களுக்கு பாகுபாடின்றி வேலை வாய்ப்பை வழங்க, புதிய சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றலாம்,’ என உத்தரவிட்டனர்….

Related posts

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரம் : அக்.24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை தயாரிக்க திட்டம்: டிசம்பரில் சோதனை ஓட்டம்