3வது முறையாக சீன அதிபராகும் ஜின்பிங்க்: கட்சி மாநாட்டில் முக்கிய தீர்மானம்

பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த ஆண்டு மூன்றாவது முறையாக மீண்டும் அதிபராக பதவியேற்கும் அதிகாரம் உள்பட முக்கிய தீர்மானங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவி வகிக்கிறார். இந்நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநாடு நேற்றுடன் முடிந்தது. இதில் 100 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், அதிபர் ஜி ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டில் கட்சியின் 20வது தேசிய மாநாட்டை கூட்டி, அதில் ஜி ஜின்பிங்கை 3வது முறையாக அதிபராக தொடர் ஒப்புதல் அளிப்பது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கடந்த 9 ஆண்டு பதவி காலத்தில் கட்சியின் நிறுவனரை விட அதிகாரமிக்க சக்தியாக ஜின்பிங் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்