2 ஆண்டுகள் காதலித்து பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை மணந்தார் புதுவை இளைஞர்

புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் வெங்கட்ராம், பிலிப்பைனஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் வெங்கட்ராம். பி.டெக் முடித்து, பிலிப்பைனஸ் நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அந்த நாட்டை சேர்ந்த கிலேசி பெத் சிம்பானன் ஓபா என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் பச்சைக்கொடி காட்டவே, திருமணத்தை தமிழ் பாரம்பரிய முறைப்படி நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து இரு வீட்டார் முன்னிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோயிலில் நேற்று காலை தமிழ் முறைப்படி வெங்கட்ராம்- கிலேசி பெத் சிம்பானன் ஓபா திருமணம் நடந்தது. மணமகன் பட்டு வேட்டி- சட்டையும், மணமகள் கூரைப்புடவையும் அணிந்திருந்தனர். மணமகளின் பெற்றோர் மற்றும் சில உறவினர்கள் நேரடியாக கலந்துகொண்டனர். மற்ற உறவினர்கள் யூடியூப் ஒளிபரப்பில் திருமணத்தை கண்டு களித்தனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி