தோப்பில் 800 கிலோ பாக்கு திருடிய 2 பேர் கைது

 

மேட்டுப்பாளையம், நவ.15: கோவை துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் சாலையில் அத்தி மரத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகரத்தினம் (63). இவருக்கு சொந்தமாக மேட்டுப்பாளையம்-வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் பொகளூர் தோட்டம் என்ற பெயரில் 10 ஏக்கர் பாக்கு தோப்பு உள்ளது. இந்த நிலையில் இவரது பாக்கு தோப்பில் அவ்வப்போது பாக்குகள் திருடு போய் இருந்துள்ளன. இதனையடுத்து பாக்குத்தோப்பை கண்காணிக்கும்படி வேலைக்கு வரும் அர்ஜுன் (38) என்பவரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி பாக்குத்தோப்பில் பாக்கு மரங்களில் இருந்து பறிக்கப்பட்ட பாக்குகளை உரித்தும், வெட்டியும் வைத்திருந்த பாக்குகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். விசாரித்தபோது பாக்கு தோப்பிற்கு வேலைக்கு வரும் வெல்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் மற்றும் அவரது நண்பர் கூடுதுறை மலையைச்சேர்ந்த சரவணன் (31) உள்ளிட்ட இருவரும் 800 கிலோ பாக்குகள் திருடியது தெரியவந்தது. இது குறித்து பாக்கு தோப்பு உரிமையாளர் கனகரத்தினம் நேற்று கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை