2வது இன்னிங்சில் போராடுகிறது இலங்கை: கருணரத்னே, சண்டிமால் அரை சதம்

காலே: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்துள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கமிந்து மெண்டிஸ் 114, குசால் மெண்டிஸ் 50 ரன் விளாசினர். நியூசி. பந்துவீச்சில் வில்லியம் ஓ’ரூர்கே 5 விக்கெட் கைப்பற்றினார். நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 340 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையிம் இழந்தது. லாதம் 70, டேரில் மிட்செல் 57, வில்லியம்சன் 55, பிலிப்ஸ் 49*, ரச்சின் 39, பிளண்டெல் 25 ரன் எடுத்தனர்.

இதையடுத்து, 35 ரன் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்துள்ளது. கருணரத்னே 83 ரன், சண்டிமால் 61 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். நிசங்கா 2, கமிந்து 13 ரன்னில் வெளியேறினர். ஏஞ்சலோ மேத்யூஸ், கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா தலா 34 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து பந்துவீச்சில் ஓ’ரூர்கே 3, அஜாஸ் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 6 விக்கெட் இருக்க, இலங்கை அணி 202 ரன் முன்னிலையுடன் இன்று 4வது நாள் சவாலை சந்திக்கிறது.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை