2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காதல் மனைவிக்கு மொட்டையடித்து தெருவில் இழுத்துச்சென்ற கொடுமை: துணை நடிகருக்கு வலை

2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காதல் மனைவிக்கு மொட்டையடித்து தெருவில் இழுத்துச்சென்ற கொடுமை: துணை நடிகருக்கு வலைதிருமலை: இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்த மனைவிக்கு மொட்டை அடித்து தெரு, தெருவாக இழுத்து சென்ற அவரது கணவரான சினிமா தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். ந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பெடகொண்டேபுடி கிராமத்தை சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு (33). இவர் தெலுங்கு சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக (துணை நடிகர்) உள்ளார். இவர் தன்னுடன் பணியாற்றும் நெல்லூரை சேர்ந்த ஆஷாவை(26) காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐதராபாத்தில் வசித்து வந்த இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அதன்பிறகு ராம்பாபு தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோகிறேன். அதற்கு நீ சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆஷாவை தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஐதராபாத் போலீசில் ஆஷா புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், ராம்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையறிந்த ராம்பாபுவின் பெற்றோர், மருமகள் ஆஷாவை சமாதானம் செய்து வழக்கை வாபஸ் பெறும்படி கூறினர். இதையடுத்து இருவரையும் பெடகொண்டேபுடிக்கு கிராமத்திற்கு அழைத்து வந்தனர். இங்கு வந்தபிறகு ராம்பாபு ஒரு அதிகாரியிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில், மீண்டும் ஆஷாவை கொடுமைபடுத்தினார்.

இதுகுறித்து பெடகொண்டேபுடி போலீசாரிடம் ஆஷா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆஷா, கணவரை பிரிந்து தனது மகனுடன் ஐதராபாத்திற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில் ராம்பாபு 2வது திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து. வருகிறது. இதையறிந்த ஆஷா, ராம்பாபுவிடம் சட்டப்படி விவாகரத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். மேலும் நான் கொடுத்த பணம் மற்றும் என் மகனுக்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றார். இதற்கு ராம்பாபு நான் இழப்பீடு தருகிறேன். ஆனால் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

இதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்ததால், இருவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரடைந்த ராம்பாபு, வீட்டிற்குள் இழுத்துச்சென்று ஆஷாவிற்கு மொட்டை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் நேற்று தெரு, தெருவாக இழுத்து சென்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர். தன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட ஆஷாவை மீட்டு ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து ராம்பாபுவை தேடி வருகின்றனர்.

Related posts

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்