சபரிமலையில் 4 நாளில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறந்து 4 நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நாளில் இருந்தே பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்காக பம்பை, நிலக்கல் எருமேலி, செங்கணூர், குருவாயூர், திருவனந்தபுரம் உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் கடந்த இரு தினங்களாக பக்தர்கள் வருகை மிக அதிகமாக உள்ளது. கடந்த 4 நாளில் சபரிமலையில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 2.15 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆன்லைனை விட உடனடி கவுண்டர்களில் தான் அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

 

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு