சென்னை விமானநிலையத்தில் இன்று போதிய பயணிகள் இன்றி 2 விமானங்கள் ரத்து

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று காலை போதிய பயணிகள் இல்லாமல், டெல்லி-சென்னை மற்றும் சென்னை-புதுடெல்லி சென்று வரும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. புதுடெல்லியில் இருந்து இன்று காலை 7.50 மணியளவில் புறப்பட்டு, காலை 10.45 மணியளவில் சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு வரவேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதேபோல் சென்னையில் காலை 11.25 மணியளவில் புறப்பட்டு, மதியம் 2.20 மணியளவில் புதுடெல்லிக்கு செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் என ஒரே நேரத்தில் 2 விமானங்களின் வருகை, புறப்பாடு ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இவ்விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு வேறு விமானங்களில் டிக்கெட்டுகள் மாற்றப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புதுடெல்லிக்கு வந்து செல்லும் 2 விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால், நிர்வாக காரணங்களுக்காக இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

 

Related posts

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி