போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் 2 விமானங்கள் ரத்து

சென்னை: போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. பெங்களுருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருவதால் விமான பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால், சென்னையில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரூ செல்லும் விமான பயணியரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

பெங்களூரு விமான நிலையத்தில் புறப்பட்டு, காலை 10:30 மணிக்கு சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 12:15 மணிக்கு பெங்களூரு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமான சேவை, நேற்று ரத்து செய்யப்பட்டன. இந்த இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும், சென்னை – பெங்களூர் இடையே 18 விமானங்கள் வழக்கம்போல் நேற்று இயக்கப்பட்டன.

கர்நாடக அரசு தமிழகத்திற்கு செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு, 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது.

காவிரி மேலாண்மை ஆனையத்தின் உத்தரவில் தலையிட விருப்பமில்லை எனக் கூறி, கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்று (செப்.29) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டுள்ளது. போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்