கிராவல் மண்ணை அள்ளிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்: தாசில்தார் நடவடிக்கை


தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம்‌ அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்‌டி கடத்த முயற்சி சம்பவத்தில் 2 டிப்பர் லாரிகள், ஒரு மணல் அள்ளும் இயந்திரத்தை தாசில்தார் பறிமுதல் செய்தார். திருப்பூர் மாவட்டம், குண்டடம் அடுத்துள்ள ஜோதியம்பட்‌டி சண்முகசுந்தரம் என்பவரது நிலத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு டிப்பர் லாரியில் கடத்தப்படுவதாக தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாசில்தார் அங்கு கிராவல் மண்ணை வெட்டி எடுத்த இயந்திரம், மண்ணை கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து குண்டடம் போலீசில் ஒப்படைத்தார். மேலும் இது தொடர்பாக தாசில்தார் குண்டடம் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் குண்டடம் போலீஸ் துணை ஆய்வாளர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்