சூயஸ் கால்வாயில் 2 கப்பல்கள் மோதல்

கெய்ரோ: எகிப்தின் சூயஸ் கால்வாயில் 2 கப்பல்கள் மோதியதால் உலகளாவிய நீர்வழிப்பாதையில் போக்குவரத்து தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி செல்லும் பிடபிள்யூ லெஸ்மெஸ் என்ற கப்பல் இயந்திர கோளாறு காரணமாக சூயஸ் கால்வாயில் நின்றது. அப்போது கேமன் தீவுக்கு சொந்தமான பர்ரி என்ற எண்ணெய் பொருட்கள் அடங்கிய கப்பல், இயந்திர கோளாறால் பாதிக்கப்பட்ட கப்பலுடன் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கப்பல் மோதியது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு